சினிமாவை கலக்கும் இல்லத்தரசி நடிகைகள்
|புரட்சி பெண்களாக பெரும் வாணிபம் நடக்கும் சினிமாவில் கலக்கி வரும் இந்த இல்லத்தரசி நடிகைகள் குஷ்பு, சாயிஷா, நயன்தாரா, ஜோதிகா, சுஹாசினி
ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது பழமொழி. இது கோலிவுட் நடிகைகளுக்கும் பொருந்தும். இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. அந்த வளர்ச்சிக்கு வித்திட்ட படைப்பாளர்களின் பின்னால் இருப்பவர்கள் நடிகையாக இருக்கும் அவர்களுடைய மனைவி.
தன்னுடைய முதல் படத்தில் இருந்து சினிமா உலகை வியக்க வைத்தவர் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படம் மூலம் அந்த வியப்பு உலக அளவில் விரிவடைந்துள்ளது. பலர் எடுக்க தயங்கிய பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் வெற்றிகரமாக இயக்கி முடித்திருக்கிறார் என்றால் அதன் பின் னணியில் அவருடைய மனைவி சுஹாசினிக்கும் பங்கு உண்டு.
பொன்னியின் செல்வனை உருவாக்க படைப்பாளி கணவருக்கு எல்லா விதத்திலும் துணையாக இருந்துள்ளார். படத்தின் பிரமோஷன் சுஹாசினியால் பிரமாதமாக திட்டமிடப்பட்டதை படக்குழு வினர் பாராட்டுகின்றனர். பிரமாண்டமான இசை வெளீயிட்டு விழாவிலும் இவரது பங்களிப்பு இருந்தது. மணிரத்தினத்தின் வெற்றிக்கு பின்னால் சுஹாசினி இருக்கிறார்.
தன்னுடைய படங்களை வெகுஜன மக்கள் ரசிக்கும்படி கலகலப்பாக இயக்கி பெயர் வாங்கியவர் சுந்தர்.சி இவருடைய வெற்றிக்கு பின்னால் துணை நிற்பவர் அவருடைய மனைவி குஷ்பு. சுந்தர்.சி தயாரிக்கும் படங்களின் பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்.
நடிகராக பயணிக்க ஆரம்பித்த ஆர்யா திருமணத்துக்கு பிறகு தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். ஆர்யா படங்களை தயாரிக்க அவருடைய மனைவி சாயிஷா துணையாக இருக்கிறார்
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகராக திகழ்பவர் சூர்யா. கேரக்டருக்காக உடலை வருத்தி நடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். இன்னொரு புறம் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். சூர்யாவின் பட தயாரிப்பு பணிகளில் அவருடைய மனைவி ஜோதிகாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. கணவனுக்கு மனைவியாக, பிள்ளைகளுக்கு தாயாக, சினிமா கம்பெனி தயாரிப்பாளராக என பன்முகம் கொண்ட ஜோதிகா தங்கள் தயாரிப்பு கம்பெனியை வெற்றிகரமாக நடத்துவதோடு வெற்றி படங்களை கொடுப்பதற்கு காரணமாகவும் இருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்யும் ஒரு சிலரில் நடிகை நயன்தாராவும் ஒருவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கணவர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த பிறகு நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். விக்னேஷ் சிவனுக்கு பக்கபலமாக இருந்து பட தயாரிப்புகளில் உதவி செய்து வருகிறார்.
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற சமூகத்துக்கு நடுவே புரட்சி பெண்களாக பெரும் வாணிபம் நடக்கும் சினிமாவில் கலக்கி வரும் இந்த இல்லத்தரசி நடிகைகள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.