ஹனிரோஸின் "ரேச்சலுக்கு" காதலன் தேவை...! அதிரடி விளம்பரம்...!!!
|ரேச்சல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படுவதால் இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
திருவனந்தபுரம்
ஹனிரோஸ் கசாப்புக் கடைக்காரியாக நடிக்கும் ரேச்சல் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கையில் கத்தியுடன் கசாப்புக் கடைக்காரியாக ஹனி ரோஸைப் பார்த்து பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர்.
ரேச்சல் படத்தை அறிமுக டைரக்டர் ஆனந்தினி பாலா இயக்குகிறார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை ராகுல் மணப்பாட் மற்றும் அப்ரிட் ஷைன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படம் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படுவதால் இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
தற்போது ரேச்சலுக்கு சினிமாவில் ஜோடியாக நடிக்க காதலனை தேடி படக்குழு விளம்பரம் வெளியிட்டு உள்ளது.
ரேச்சலுக்கு காதலன் தேவை திரையுலக வயது 28 முதல் 30 வரை.
ரேச்சலின் தோழி வேடத்திற்கு 40-45 வயதுடைய ஒரு பெண் தேவை.
விருப்பம் உள்ளவர்கள் 9074817162, 9048965955, 7907831279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொச்சி வென்னாலா ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்கு அருகில் உள்ள மேட்டினி லைவ் என்ற இடத்தில் தேர்வுகள் நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.