< Back
சினிமா செய்திகள்
hollywood movies filmed in india
சினிமா செய்திகள்

இந்தியாவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்

தினத்தந்தி
|
3 Aug 2024 11:49 AM IST

பல ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

சென்னை,

ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தியாவிலும் அதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1. 'லைப் ஆப் பை'

ஆங் லி இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'லைப் ஆப் பை'. சூரஜ் சர்மா, தபு, இர்பான் கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் பாண்டிச்சேரி மற்றும் கேரளா பகுதியில் படமாக்கப்பட்டது.

2. 'தி போர்னே சுப்ரிமெசி'

பால் கிரீன்கிரஸ் இயக்கிய 'தி போர்னே சுப்ரிமெசி' படத்தில் மேட் டோமன், ஜுலியா ஸ்டில்ஸ், பிரெயம் காக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இப்படம் கோவாவில் படமாக்கப்பட்டது.

3. 'ஸ்லம்டாக் மில்லியனர்'

தேவ் படேல் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் பிரெய்டா பிண்டோ, ரூபினா அலி உள்ளிட்ட பலர் நடித்தனர். டேனி பாய்லே இயக்கிய இப்படம் மும்பையில் படமாக்கப்பட்ட்து.

4. 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பில் ஆப் தூம்'

ஸ்டீவென் ஸ்பெல்பெர்க் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான படம் 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பில் ஆப் தூம்'. ஹரிசன் போர்டு நடித்த இப்படம் ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசியில் படமாக்கப்பட்டது.

5.'மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் புரோட்டோகால்'

டாம் குரூஸ் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் 'மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் புரோட்டோகால்'. பிரண்டு பேர்டு இயக்கிய இப்படம் மும்பையில் படமாக்கப்பட்டது.

6. 'மில்லியன் டாலர் ஆர்ம்'

ஜான் ஹாம் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'மில்லியன் டாலர் ஆர்ம்'. கிரேக் கில்லெஸ்பி இயக்கிய இப்படம் மும்பை மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது.

7. 'தி டார்க் நைட் ரைசஸ்'

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'தி டார்க் நைட் ரைசஸ்' கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. கிறிஸ்டியன் பேல் பேட் மேனாக நடித்த இப்படத்தின் சில காட்சிகள் ஜோத்பூரில் உள்ள மெஹ்ரன்கரில் படமாக்கப்பட்டது.

இது மட்டுமின்றி மேலும் பல இந்தியாவில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் உள்ளன.

மேலும் செய்திகள்