ஹாலிவுட் நாடக நடிகர் மரணம்
|ஹாலிவுட்டின் பிரபல நாடக நடிகரும், பாடகருமான கிறிஸ் பெலுசோ, அமெரிக்காவின் பிராட்வே நகரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 40.
பிராட்வேயில் உள்ள நாடக அரங்குகளில் முன்னணி நடிகராகவும், பாடகராகவும் வலம் வந்த கிறிஸ் பெலுசோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். 'மம்மா மியா', 'அசாசின்ஸ்', 'லெஸ்டாட்', 'தி குளோரியஸ் ஒன்ஸ்', 'அண்ட் பியூட்டிபுள்', 'தி கேரல் கிங் மியூசிக்கல்' உள்ளிட்ட இவரது பல படைப்புகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.
இதுதவிர பாடல்கள் பாடுவதிலும் திறமையுள்ள கிறிஸ் பெலுசோ, தனது தனித்துவ குரல் மற்றும் வார்த்தைகள் உச்சரிப்பு காரணமாக பெரிதும் விரும்பப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக கிறிஸ் பெலுசோ வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இதற்கிடையில் அவர் மரணம் அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'கிறிஸ் பெலுசோவின் மரணம் நாடக கலைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு' என பிராட்வே நாடகங்கள் அமைப்பின் நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்தனர். கிறிஸ் பெலுசோ படித்த மிச்சிகன் இசை பல்கலைக்கழகமும் இரங்கல் வெளியிட்டுள்ளது.
மரணம் அடைந்த கிறிஸ் பெலுசோவுக்கு ஜெசிகா கோம்ஸ் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். அவரது மரணத்துக்கு ஹாலிவுட் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.