< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கேம் ஆப் த்ரோன்ஸில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் மரணம்...!
|17 Aug 2023 7:47 AM IST
உடல்நிலை மோசமாகி நடிகர் டேரன் கென்ட் மரணம் அடைந்தார்
பிரபல ஹாலிவுட் நடிகர் டேரன் கென்ட். இவர் 2008-ல் வெளியான 'மிரர்ஸ்' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2012-ல் வெளியான சன்னிபாய் என்ற படத்தில் நடித்து 'வான் டி' விருதை வென்றார்.
எம்மி விருது பெற்ற 'கேம் ஆப் த்ரோன்ஸ்' தொடரில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன் தொடரிலும் நடித்து இருக்கிறார். டேரன் கென்டுக்கு சருமநோய் பாதிப்புகள் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும் குணமாகவில்லை.
இந்த நிலையில் உடல்நிலை மோசமாகி டேரன் கென்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. டேரன் கென்ட் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.