< Back
சினிமா செய்திகள்
மகளுடன் ஹோலி கொண்டாடிய ஆலியா பட் - வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

மகளுடன் ஹோலி கொண்டாடிய ஆலியா பட் - வீடியோ வைரல்

தினத்தந்தி
|
26 March 2024 11:06 AM IST

மகளுடன் ஆலியா பட் ஹோலி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பை,

ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரைப்பிரபலங்களும் ஹோலி பண்டிகையை தங்கள் குடுப்பத்தினருடன் வெகு விமரிசையாக கொண்டாடினர்.

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் இருவரும் தங்களது மகள் ராஹாவுடன் சேர்ந்து அக்கம்பக்கத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

இது குறித்தான வீடியோ வெளியானதை அடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வீடியோவில், ரன்பீர் கபூர் கருப்பு நிற சட்டையையும், ஆலியா பட் ஆரஞ்சு நிற உடையையும் அணிந்திருந்தனர். அவர்களது மகள் வெள்ளை நிற உடை அணிந்து தாய் ஆலியா பட்டுடன் நிற்கிறாள். மேலும் அதில் ஆலியா பட், மகள் ராஹாவின் முகத்தில் வண்ணப்பொடியை பூசுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக மகளிர் தினத்தன்று ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதய வடிவ பொம்மை போன்ற ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் பகிர்ந்த பதிவில், இது எனக்காக என் குட்டி வுமன் செய்தது... இதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...இனிய மகளிர் தின வாழ்த்துகள். என்று தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்