< Back
சினிமா செய்திகள்
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
12 Jan 2023 2:07 PM IST

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

'ஆம்பள' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'மீசையை முறுக்கு' என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'அன்பறிவு' ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் காஷ்மிரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'பி.டி.சார்' பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்