< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி
|20 Jan 2023 12:04 PM IST
ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘பி.டி.சார்'.
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'பி.டி.சார்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை கார்த்திக் வேணுகோபாலன் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தை இயக்கி பிரபலமானவர். இதில் நாயகியாக கஷ்மிரா பர்தேசி நடிக் கிறார். அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம். இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.