< Back
சினிமா செய்திகள்
காபி வித் காதல் படத்தின் தியாகி பாய்ஸ் பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

'காபி வித் காதல்' படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
8 Aug 2022 10:00 PM IST

யுவன் சங்கர் ராஜா, ஹிப் ஹாப் தமிழா ஆதி இணைந்து பாடியுள்ள 'தியாகி பாய்ஸ்' பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அரண்மனை 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி 'காபி வித் காதல்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் தொடங்கியது. சமீபத்தில் காபி வித் காதல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் 'ரம் பம் பம்' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது 'காபி வித் காதல்' படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடியுள்ள 'தியாகி பாய்ஸ்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை பேரரசு எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்