< Back
சினிமா செய்திகள்
டீப் பேக் வீடியோவில் சிக்கிய இந்தி நடிகை நோரா பதேகி
சினிமா செய்திகள்

டீப் பேக் வீடியோவில் சிக்கிய இந்தி நடிகை நோரா பதேகி

தினத்தந்தி
|
23 Jan 2024 5:15 AM IST

இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகின.

மும்பை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரை தொடர்ந்து இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகின.

இந்த வரிசையில் தற்போது இந்தி நடிகையும், பின்னணி பாடகியுமான நோரா பதேகியின் டீப் பேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போன்று வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், அந்த விளம்பரத்தில் இருப்பது நான் இல்லை என்றும், இந்த விளம்பரத்திற்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று நடிகை நோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, "டீப் பேக் வீடியோ என்னை அதிர்ச்சியடைய செய்து விட்டது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்