ஓணம் பண்டிகையை வண்ணமயமாக்கிய நாயகிகள் - சொக்கிப்போகும் ரசிகர்கள்!
|கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தவர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மக்களால் கொண்டாடப்படும் பல திருவிழாக்களில் ஒன்று தான் ஓணம் பண்டிகை. தற்பொழுது இந்த பண்டிகை வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி கடந்த ஆண்டு நடிகர் ஆதி அவர்களை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து தனது முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.
திரிசூரில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற சிறந்த நடிகையாக வலம் வருபவர் தான் அபர்ணா பாலமுரளி தற்பொழுது அவர் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
நடிகர் கவுதம் கார்த்தி அவர்களுக்கும் நடிகை மஞ்சிமா மோகன் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் அவரும் தனது முதல் ஓணம் பண்டிகையை தனது கணவருடன் இணைந்து கொண்டாடி வருகிறார்.
தனியார் டிவி நிகழ்ச்சி நடத்திய பிக் பாசில் பங்கேற்றதின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் சம்யுக்தா சண்முகநாதன். இவர் தற்பொழுது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை முறுக்கேற வைத்துள்ளார்.
கேரளாவில் பிறந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வரும் மற்றொரு நடிகையான நிகிலா விமல் . அவர் தனது சொந்த ஊரில் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்.