< Back
சினிமா செய்திகள்
வேல் பச்சை குத்திய சுருதிஹாசன்
சினிமா செய்திகள்

வேல் பச்சை குத்திய சுருதிஹாசன்

தினத்தந்தி
|
26 April 2023 12:00 AM GMT

நடிகை சுருதிஹாசன் தனது முதுகில் வேல் வடிவ பச்சைக் குத்திக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மகளான சுருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் புலி, அஜித்குமாருடன் வேதாளம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சுருதிஹாசன், தனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம் என்றும் முருக கடவுள் தனது இஷ்ட தெய்வம் என்றும் அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் தனது உடலில் முருக கடவுள் கையில் வைத்திருக்கும் வேலை பச்சைக்குத்திக் கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "எனக்கு ஆன்மிகத்தில் எப்போதும் ஈடுபாடு உண்டு. முருக பெருமானின் வேலுக்கும் என் இதயத்தில் எப்போதும் தனி இடம் இருக்கிறது. வேல் பச்சை குத்தியதன் மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன். பச்சைக்குத்துவது என்பது எனது வழக்கமான பழக்க வழக்கங்களில் ஒன்று.

தற்போது ஆன்மிகத்தில் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று கருதி வேல் பச்சை குத்திக்கொண்டேன்'' என்றார். சுருதிஹாசன் வேல் பச்சைக் குத்திக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

மேலும் செய்திகள்