'நானும் ரவுடிதான்' படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்த ஜான்வி கபூர்
|'நானும் ரவுடிதான்' படத்தை 100 முறை பார்த்ததாக ஜான்வி கபூர் கூறினார்.
சென்னை,
நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தெலுங்கில் ஜுனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி'. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர், விஜய் சேதுபதியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
'விஜய் சேதுபதி சார் நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தை 100 முறை பார்த்தேன். அதற்கு பிறகு அவருடைய போன் நம்பரை வாங்கி அவருக்கு போன் செய்து, சார் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. உண்மையிலேயே உங்களுடன் நடிக்க விருப்பமாக உள்ளது, என்று கூறினேன்.
இந்த உரையாடல் முழுவதுமே அவர், ஐயோ..ஓ என்றுதான் சொன்னார். இப்படி பேசியதால் அவர் என்ன உணர்ந்தார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக ஆச்சரியப்பட்டார்'. இவ்வாறு கூறினார்.