ஒரே நாளில் பிறந்த தாய்- தந்தைக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
|கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் - தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
சென்னை
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் மலையாள திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்.
அதே போல் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர். 1980 ஆம் ஆண்டு, ராமாயி வயசுக்கு வந்தாச்சு என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து, கீழ் வானம் சிவக்கும், காலம், நெற்றிக்கண் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேனகா கடந்த 1987 ஆம் ஆண்டு, தயாரிப்பாளர் சுரேஷை திருமணம் செய்து கொண்ட பின்னர் முழுமையாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி, குடும்பம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.
இவருடைய மூத்த மகளான ரேவதி, கீர்த்தி நடித்த வசி என்கிற படத்தை தயாரித்தார். மேலும் பல படங்களில் இவர் துணை இயக்குனராக பணியாற்றியுள்ள நிலையில், விரைவில் படம் இயக்கவும் உள்ளார்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் - தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷ், ஒரே நாளில் பிறந்த தன்னுடைய தாய் - தந்தைக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.