மதுரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி? எம்.பி ஹேமமாலினி பதில்!
|நடிகை ஹேமமாலினியின் மதுரா தொகுதியில், நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
லக்னோ,
நடிகை ஹேமமாலினி உத்தர்பிரதேச மாநிலம் மதுரா தொகுதி எம்.பி ஆக உள்ளார். அந்த தொகுதியில் போட்டியிட்டு 2014 மற்றும் 2019 ஆண்டுகலில் 2 முறை வெற்றி பெற்றவர்.
சமீபத்தில், நடிகை கங்கனா ரனாவத் பிருந்தாவன் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவரை பார்க்க மக்கள் கூட்டம் கூடினர். எனினும் அவர் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் அரசியலில் கால்பதிக்கும் எண்ணம் உள்ளதாக அவர் பேட்டியில் கூறி உள்ளார்.
இந்நிலையில், நடிகை ஹேமமாலினியின் மதுரா தொகுதியில், அடுத்த தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
இதற்கு பதிலளித்த எம்.பி ஹேமமாலினி, "மதுரா தொகுதியில் திரைத் துறையை சார்ந்தவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். வேறு யாராவது போட்டியிட்டால் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய மாட்டீர்கள். எதிர்காலத்தில் நடிகை ராக்கி சாவந்த் கூட இங்கு போட்டியிட்டு எம்.பி ஆக வரலாம், கடவுளை பொறுத்தது" என்றார்.