< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் மாரடைப்பு: பிரபல டைரக்டர் ஆஸ்பத்திரியில் அனுமதி
|10 Jun 2023 8:02 AM IST
90 கிட்ஸ்களின் பிரபல திகில் மற்றும் திரில்லர் தொடராக விளங்கிய 'மர்மதேசம்' தொடரை இயக்கியவர் நாகா. இதுதவிர ரகசியம், விடாது கருப்பு, எதுவும் நடக்கலாம், சிதம்பர ரகசியம், யாமிருக்க பயமேன் போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார்.
சாயாசிங் நடிப்பில் வெளியான 'ஆனந்தபுரத்து வீடு' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
தற்போது ஓ.டி.டி. தளத்துக்கு வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த வெப் தொடர் படப்பிடிப்பின்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதனால் படக்குழுவினர் பதறி போனார்கள்.
உடனடியாக டைரக்டர் நாகாவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.