உடல்நிலை பாதிப்பு... உணவு பழக்கத்தை மாற்றிய சமந்தா
|உடல்நிலை பாதிப்பு காரணமாக உணவு பழக்க வழக்கங்களை சமந்தா முழுமையாக மாற்றி இருக்கிறார்.
நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். ஆனாலும் முழுமையாக குணமடையவில்லை.
இதையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதற்காக சென்று இருக்கிறார். படங்களில் நடிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக உணவு பழக்க வழக்கங்களை சமந்தா முழுமையாக மாற்றி இருக்கிறார். விரும்பி சாப்பிட்டு வந்த உணவு வகைகளை நிறுத்தி உள்ளார்.
குறிப்பாக நோயை தீவிரப்படுத்தும் உணவு வகைகளான நட்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைகள், பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுகளை முழுமையாக தவிர்த்து விட்டார்.
பிடித்தமான பிரெட்டையும் தொடவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு பிறகு தனக்கு விருப்பான பிரெட்டை பட்டருடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரெட் மற்றும் பட்டரை அவர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சமந்தாவின் பதிவு வைரலாகிறது.