மலையாள நடிகை ஹனிரோஸுக்கு கோயில் கட்டிய தமிழக ரசிகர்
|தமிழக ரசிகர் ஒருவர், தனக்கு கோயில் கட்டி இருப்பதாக நடிகை ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில் 'முதல் கனவே', 'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹனிரோஸ். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கிலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஹனிரோசுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். இந்த தகவலை ஹனிரோஸே நிருபர்களிடம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''மலையாளத்தில் நான் நடித்த முதல் படமான பாய்பிரண்ட் என்ற படத்தில் இருந்தே ரசிகர்கள் பலர் என்னை பாராட்டி வருகிறார்கள். தொலைபேசியில் தொடர்பு கொண்டும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். தற்போது எனக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். எனது பிறந்த நாளில் அங்கு பாயாசம் வழங்குகின்றனர். இவ்வளவு வருடமாக ரசிகர்கள் என்னை தொடர்வது வியப்பாக உள்ளது" என்றார். எந்த ஊரில் கோவில் கட்டியுள்ளனர் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.