'அவர் பிரபாஸின் மிகப்பெரிய ரசிகர்' - 'கல்கி 2898 ஏடி' இயக்குனர் கூறியது யாரை?
|இயக்குனர் நாக் அஸ்வின் பிரபாஸ், அமிதாப்பச்சனுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது, 'கல்கி 2898 ஏடி' நெட்பிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் நாக் அஸ்வின் பிரபாஸ் மற்றும் அமிதாப்பச்சனுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, அமிதாப் பச்சன் பிரபாஸின் மிகப்பெரிய ரசிகர் என்பதைக் அறிந்ததும் ஆச்சரியமாக இருந்தது என்றும், அதேபோல அமிதாப் பச்சனின் தீவிர ரசிகரான பிரபாஸ், படப்பிடிப்பின்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பிரபாஸ் நடித்த சலார் பாகம் 1 ஐப் அமிதாப் பச்சன் 2 முறை பார்த்ததாக கூறியதையும் வெளிப்படுத்தினார்.