< Back
சினிமா செய்திகள்
இதுநாள் வரைக்கும் கத்துக்கல - இளையராஜா
சினிமா செய்திகள்

இசை கத்துக்க சென்னைக்கு வந்தவன்.. இதுநாள் வரைக்கும் கத்துக்கல - இளையராஜா

தினத்தந்தி
|
20 May 2024 10:00 PM IST

நான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என இளையராஜா கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.,யில் இளையராஜா பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுகிறது. இந்தநிலையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:-

நான் சாதித்து விட்டேன் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ, அப்படியேதான் இன்றும் இருக்கிறேன். இசை கத்துக்க சென்னைக்கு வந்தவன், இதுநாள் வரைக்கும் கத்துக்கல.. அதுதான் நான். மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்