< Back
சினிமா செய்திகள்
தவறாக நடந்தார்... டான்ஸ் மாஸ்டர் மீது பிரபல நடிகை புகார்
சினிமா செய்திகள்

தவறாக நடந்தார்... டான்ஸ் மாஸ்டர் மீது பிரபல நடிகை புகார்

தினத்தந்தி
|
20 Sept 2023 6:27 AM IST

பிரபல வங்க மொழி நடிகை சயந்திகா பானர்ஜி. இவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருக்கிறார். சமீபத்தில் 'சாயாபஜ்' என்ற படத்தில் நடிப்பதற்காக சயந்திகா பானர்ஜி வங்காள தேசம் சென்று இருந்தார்.

அங்கு படப்பிடிப்பில் பங்கேற்றபோது நடன இயக்குனர் மைக்கேல் என்பவர் தன்னிடம் அத்துமீறி தவறாக நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார். படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து கொல்கத்தா திரும்பி விட்டார்.

இதுகுறித்து சயந்திகா பானர்ஜி கூறும்போது, "படப்பிடிப்பு தளத்திலும், நடன ஒத்திகையிலும் மைக்கேல் என்னிடம் பலமுறை தவறாக நடக்க முயன்றார். எனது கையை பிடித்து இழுத்தார். உடன்பட மறுத்ததும் மிரட்டினார். படப்பிடிப்பு தளத்திலேயே அவரது அத்துமீறலை படக்குழுவினர் எல்லோருக்கும் தெரிவித்தேன்.

ஆனாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் கொல்கத்தா திரும்பிவிட்டேன்'' என்றார். சயந்திகா பானர்ஜியின் 'மீ டூ' புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்