ஹார்மோன் ஊசி போட்டேனா? நடிகை ஹன்சிகா விளக்கம்
|இந்தியில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கதாநாயகி ஆனவர் ஹன்சிகா. தமிழில் மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். அவரது துறுதுறு நடிப்பும், சிரிப்பும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சின்ன குஷ்பு என்று அழைத்தனர். முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
கடந்த வருடம் சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா சினிமாவில் அறிமுகமான புதிதில் அவருக்கு உடல் வளர்ச்சியை அதிகமாகி காட்ட அவரது அம்மா ஹார்மோன் ஊசி போட்டதாக ஏற்கனவே வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை ஹன்சிகாவின் தாயார் மறுத்து இருந்தார்.
தற்போது இந்த சர்ச்சைக்கு ஹன்சிகாவும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் சிறுமியாக இருந்தபோது எனது தாயார் ஹார்மோன் ஊசிகளை எனக்கு செலுத்தி விரைவில் பெரிய பெண்ணாக்கி விட்டதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை. நான் ஒரு பிரபலம் என்பதால் இதுபோன்ற வதந்திகள் வருகின்றன.
எனக்கு ஊசி என்றால் பயம். ஊசி பயம் காரணமாக பச்சைக்குத்திக்கொள்வது இல்லை. அப்படி இருக்க என் தாய் எப்படி ஹார்மோன் ஊசி போடுவார். நானும் எப்படி சம்மதிப்பேன். இந்த வதந்திகள் மூலம் எனது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்பது புரிகிறது'' என்றார்.