அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்தேனா? யாஷிகா ஆனந்த் விளக்கம்
|இனிமே இப்படித்தான் என்ற படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை யாஷிகா ஆனந்த்.
சென்னை,
தமிழில் இனிமே இப்படித்தான், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துக்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.
இதில் கவர்ச்சியில் துணிச்சலாக நடித்து இருந்தார். இந்த படத்துக்கு பிறகு யாஷிகாவுக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்தனர். பட வாய்ப்புகளும் குவிந்தன.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் சில காலம் நடிக்காமல் இருந்தார். உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
அரைகுறை உடையில் கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் யாஷிகா ஆனந்த் அழகை மெருகேற்ற அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார். அதனால்தான் விபத்துக்கு பிறகும் அழகாக இருக்கிறார் என்று பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.
இதற்கு யாஷிகா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் அழகுக்காக அறுவை சிகிச்சை எதையும் செய்து கொள்ளவில்லை'' என்று கூறியுள்ளார்.