< Back
சினிமா செய்திகள்
அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்: வாணி போஜன்
சினிமா செய்திகள்

அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்: வாணி போஜன்

தினத்தந்தி
|
13 Feb 2024 7:10 PM IST

நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என கூறிய வாணி போஜன், தனக்கும் அரசியல் ஆசை இருந்ததாக கூறினார்.

சென்னை,

ஓ மை கடவுளே, லாக்கப், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், வாணி போஜன். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், ராதாமோகன் இயக்கத்தில் 'சட்னி சாம்பார்' வெப் தொடர் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிரபல நகை கடையின் திறப்பு விழாவில் கலந்துகொன்ட அவர், அரசியல் ஆசை தனக்கும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "சினிமாவில் மசாலா படங்களைப் பார்ப்பதை விட கருத்துள்ள படங்களைப் பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தற்போது சமூக கருத்துள்ள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் அது வெளியாகும். அரசியலுக்கு வருவது பற்றிக் கேட்கிறார்கள். நல்லது செய்ய விரும்பும் யாரும் அரசியலுக்கு வரலாம். செங்களம் என்ற வெப் தொடரில் நடிக்கும் போது, எனக்கும் அந்த ஆசை இருந்தது. இப்போதும் இருக்கிறது. அரசியலில் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்" என்றார்.

மேலும் செய்திகள்