தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் இருந்து திரிஷா விலகலா...! உண்மை என்ன...!
|24 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயும்- திரிஷாவும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை
'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் தொடங்கி நடிபெற்று வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. நடிகை திரிஷா படத்தில் நடித்து வருகிறார். இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆனால் விஜயின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதற்கு ஏற்றாற் போல் திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் படம் தொடர்பான பதிவுகளை நீக்கிவிட்டதாக செய்திகள் வந்தன.
படக் குழுவினருடன் ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான கருத்து வேறுபாடு காரணமாக திரிஷா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது "லியோ படத்தின் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக திரிஷா காஷ்மீருக்கு சென்று உள்ளார். விஜய், திரிஷா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார் என்று வரும் செய்தியை கேட்டு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறினா
திரிஷாவும், விஜய்யும் சேர்ந்து நடித்த படங்களில் வந்த காட்சிகளை ஒன்றிணைத்து சன் மியூசிக் சேனல், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்துள்ளா ர் திரிஷா. மேலும் சன் மியூசிக்கின் அந்த வீடியோ டுவீட்டை ரீட்வீட்டும் செய்துள்ளார். இதன் மூலம் தான் லியோ படத்தில் இருப்பதை திரிஷா உறுதி செய்துவிட்டார்.