'தேவரா பாகம்-1': டிரெய்லர் எப்போது? - வெளியான தகவல்
|'தேவரா பாகம்-1' படத்தின் டிரெய்லரைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
சென்னை,
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படமாக உருவாகி வரும் 'தேவரா பாகம்-1' படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. அடுத்த மாதம் 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், அதற்கு முன்பாக இதன் டிரெய்லரைக்காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், 'தேவரா பாகம்-1': டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.