'டாக்சிக்' படப்பிடிப்பை தொடங்கினாரா நயன்தாரா? - வைரலாகும் புகைப்படம்
|நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
சென்னை,
'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நடித்து இந்தியில் அறிமுகமானார்.
இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியதோடு நயன்தாராவை இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக்கியது. தற்போது, யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படம், ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது 'டாக்சிக்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, நயன்தாரா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள 'டெஸ்ட்' படமும், 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படமும் விரைவில் திரைக்கு வர உள்ளன. மலையாளத்தில் நிவின் பாலி-யுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.