காதலில் விழுந்தாரா அஞ்சலி?
|'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அஞ்சலி.
சென்னை,
'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், அஞ்சலி. 'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', 'நாடோடிகள்-2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
துருதுரு நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் அஞ்சலி தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு பாடலுக்கு நடனமாடவும் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பெற்று வருகிறார்.
இதற்கிடையில் அஞ்சலி காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கின்றன. அவர், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் என்றும் பேசப்படுகிறது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவருடன்தான் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறாராம்.
இதனால் அந்த தயாரிப்பாளரும், அஞ்சலியும் காதலிப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இந்த காதல் குறித்து இருதரப்பில் இருந்தும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் காதல் உண்மையா? என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கும் அஞ்சலி மவுனமே சாதித்து வருகிறாராம்.
37 வயதாகும் அஞ்சலி தற்போது தெலுங்கில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார்.