< Back
சினிமா செய்திகள்
ஹாரிபாட்டர் படங்களில் டம்பிள்டோர் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் காம்பன் காலமானார்..!

twitter image via ANI

சினிமா செய்திகள்

'ஹாரிபாட்டர்' படங்களில் 'டம்பிள்டோர்' கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் காம்பன் காலமானார்..!

தினத்தந்தி
|
28 Sept 2023 8:56 PM IST

'ஹாரிபாட்டர்' படங்களில் 'டம்பிள்டோர்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.

உலகப் புகழ்பெற்ற 'ஹாரிபாட்டர்' திரைப்படங்களில் 'ஆல்பஸ் டம்பிள்டோர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிரிட்டிஷ்-ஐரிஷ் நடிகர் மைக்கேல் காம்பன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி மற்றும் நாடகம் என பல தசாப்தங்களாக நடித்து வரும் காம்பன் நான்கு தொலைக்காட்சி பிஏஎப்டிஏ விருதுகளையும் ஆலிவர் விருதையும் வென்றுள்ளார். அயர்லாந்தில் பிறந்த காம்பன், 1962-ம் ஆண்டு மேடை நாடகம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.

ஹாரி பாட்டர் திரைப்பட வரிசையில் வெளிவந்த எட்டு படங்களில் 6 படங்களில் காம்பன் 'டம்பிள்டோர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்த நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காம்பன், உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவைத் தொடர்ந்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்