< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் பக்கம் 2 நாட்களாக முடக்கம்
|12 March 2023 6:48 PM IST
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
"மின்னலே"வில் இசையமைப்பாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய ஹாரிஸ் ஜெயராஜின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்... தமிழ், தெலுங்கு, இந்தி என்று பன்மொழிகளில் கலக்கி வரும் ஹாரிஸ் பல விருதுகளைக் குவித்துள்ள
ஹாரிஸ் ஜெயராஜ் மின்னலே, சாமுராய், அரசாட்சி, வாரணம் ஆயிரம், சாமி, லேசா லேசா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, கஜினி, கோ, தாம்தூம், ஏழாம் அறிவு, தொட்டி ஜெயா, அந்நியன், நண்பன், துப்பாக்கி, என்னை அறிந்தால், 12 பி, கோவில், அயன், பீமா, உட்பட பல படங்கள் மியூசிக்கல் ஹிட் படங்களில் இசை அமைத்தவர்.
இந்தநிலையில், அவரது டுவிட்டர் கணக்கு 2 நாட்களாக முடப்பட்டு உள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஹாய் நண்பர்களே...எனது டுவிட்டர் க்கவுண்ட் இரண்டு நாட்களாக ஹேக் செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்.