< Back
சினிமா செய்திகள்
பார்க்கிங் படத்தின் 2-ம் பாகத்தில் ஹரிஷ் கல்யாண்
சினிமா செய்திகள்

'பார்க்கிங்' படத்தின் 2-ம் பாகத்தில் ஹரிஷ் கல்யாண்

தினத்தந்தி
|
31 March 2024 2:45 AM IST

‘பார்க்கிங்' படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை எழுதும் பணிகளை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாக திகழ்கிறார், ஹரிஷ் கல்யாண். 'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்', 'தாராள பிரபு', 'ஓ மணப்பெண்ணே' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் 'பார்க்கிங்' படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. ஒரு பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்த இரண்டு பேருக்கு நடக்கும் சண்டை பற்றி பதைபதைக்க வைக்கும் வகையில் இந்த படம் உருவாகி பேசப்பட்டது. இந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. மேலும் ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி பேசப்பட்டது.

இந்தநிலையில் பார்க்கிங் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான கதை எழுதும் பணிகளை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் 'பார்க்கிங்' படத்தின் 2-ம் பாகத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்