< Back
சினிமா செய்திகள்
ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்... சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய டீசல் படக்குழு
சினிமா செய்திகள்

ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்... சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய 'டீசல்' படக்குழு

தினத்தந்தி
|
29 Jun 2024 2:23 PM IST

'டீசல்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ்.பி சினிமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி 'டீசல்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் 'டீசல்' திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசாகும் என்றும் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்