< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
5 புதிய படங்களில் ஹரிஷ் கல்யாண்
|1 July 2023 12:45 PM IST
ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே 'நூறுகோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் எல்.ஜி.எம், லப்பர் பந்து, பார்க்கிங், டீசல் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் முதல் முழுநீள சண்டை படமாக டீசல் உருவாகி உள்ளது. இதில் அதுல்யா ரவி, சாய்குமார், கருணாஸ், விநய் ராய், அனன்யா, அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சண்முகம் முத்துசாமி டைரக்டு செய்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். எம்.தேவராஜுலு தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருக்கிறது.