< Back
சினிமா செய்திகள்
ஹரீஷ் கல்யான்-அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து
சினிமா செய்திகள்

ஹரீஷ் கல்யான்-அட்டகத்தி தினேஷ் நடிக்கும் 'லப்பர் பந்து'

தினத்தந்தி
|
4 March 2023 6:29 AM IST

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'லப்பர் பந்து' என்று பெயரிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



மேலும் செய்திகள்