< Back
சினிமா செய்திகள்
லவ்வர் திரைப்படம் - விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹரிணி சுந்தரராஜன்
சினிமா செய்திகள்

'லவ்வர்' திரைப்படம் - விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹரிணி சுந்தரராஜன்

தினத்தந்தி
|
12 April 2024 5:20 AM GMT

'லவ்வர்' திரைப்படத்தில் ஐஷு கதாபாத்திரத்தில் ஹரிணி சுந்தரராஜன் நடித்திருந்தார்.

சென்னை,

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கிய 'லவ்வர்' திரைப்படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடித்தார். இதில் ஸ்ரீ கவுரி பிரியா, கண்ணன் ரவி, ஹரிணி சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் லவ்வர் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. லவ்வர் படம் வெளியானதில் இருந்தே அப்படத்தில் நடித்த ஹரிணிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து ஹரிணி சுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அந்த பதிவில்,

லவ்வர் படத்தில் நடித்த ஐஷு கதாபாத்திரத்தை விரும்பாதவர்கள் அந்த பாத்திரத்தில் நடித்த என்னை விமர்சித்து வருவதை பார்கிறேன். ஒருவர் நடித்த கதாபாத்திரம் அவர்களுக்குப் பிடிக்காததால், அவரை இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்