'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் டீசர் வெளியானது
|ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை,
பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. கடைசியாக தயாரித்த விஜய்யின் மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த வல்லவனுக்கும் வல்லவன் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 2018-ல் ஆருத்ரா படத்தினை வெளியிட்டுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி வெளியிட்ட இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்து, தமிழ் சினிமாவில் நுழைந்தார்.பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸின் 101ஆவது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
இந்நிலையில் தற்போது ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.