< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி - நடிகர் நிழல்கள் ரவி
|26 Feb 2024 1:36 PM IST
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று நடிகர் நிழல்கள் ரவி கூறியுள்ளார்.
நெல்லை,
நெல்லையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அவர் தங்கி இருக்கும் தனியார் ஓட்டலில் நடிகர் நிழல்கள் ரவி சந்தித்தார். தொடர்ந்து நடிகர் நிழல்கள் ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து அவரிடம் கேட்டதற்கு, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்புக்குரியது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என அவர் தெரிவித்தார்.