' ரஜினிகாந்த் தின வாழ்த்துகள் சிவாஜி ராவ்' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
|நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று ஹோலி கொண்டாடினார்.
சென்னை,
ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரைப்பிரபலங்களும் ஹோலி பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் நேற்று ஹோலி கொண்டாடி உள்ளார். ரஜினிகாந்த் எப்போதும் தனது குடும்பத்தினருடன் கொண்டாடும் வாய்ப்பை தவற விடமாட்டார். அதில் இந்த வருட ஹோலியும் விதிவிலக்கல்ல. இது குறித்தான புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன் 'ரஜினிகாந்த் தின வாழ்த்துகள் சிவாஜி ராவ்' என்று பதிவிட்டுள்ளார்.
49 வருடங்களுக்கு முன்பாக சிவாஜி ராவ் என்கிற பெயரை இயக்குனர் பாலசந்தர், ரஜினிகாந்த் என மாற்றியது ஒரு ஹோலி பண்டிகையின் போதுதான். இன்றைய நாளை ரஜினிகாந்த் டே என்றே அவரது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது ரஜினிகாந்தின் ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெளியேதான் ரஜினிகாந்த் வீட்டில் சிவாஜிராவ்தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.