< Back
சினிமா செய்திகள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா...ரஜினிக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து...!
சினிமா செய்திகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா...ரஜினிக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து...!

தினத்தந்தி
|
12 Dec 2022 12:47 PM IST

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு கேரள நடிகர் மம்முட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர் மம்முட்டி தனது டுவிட்டர் பதிவில்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த். ஒரு சிறந்த ஆண்டு முன்னால் உள்ளது. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் இருங்கள்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியும், மலையாள நடிகர் மம்முட்டியும் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினியும், தேவ்ராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் மம்முட்டியும் நடித்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்