காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா சிறப்பு தரிசனம்
|காளிகாம்பாள் கோவிலில் நடிகை ஹன்சிகா சிறப்பு தரிசனம் செய்தார்.
சென்னை,
நடிகை ஹன்சிகா சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி திரில்லராக உருவாக இருக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு 3 மாதங்களில் முடிவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு வீட்டில் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தினர். அப்போது நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் அருகிலிருந்த காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.