< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் 'காந்தாரி ' டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
12 July 2024 4:08 PM IST

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள ‘காந்தாரி’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்."தமிழில் 'எங்கேயும் காதல்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் 'பிரியாணி', 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 2022-ல் ஜெய்ப்பூர் அரண்மனையில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் ஹான்சிகா நடித்திருந்தார்.

'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார். சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஹன்சிகா தற்பொழுது காந்தாரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

'இது நான் காவல் காக்குற இடம், யாருக்கும் அனுமதியில்லை' என ஒரே ஒரு வசனம் மட்டும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்