ஹன்சிகாவின் காந்தாரி திரைப்பட மேக்கிங் வீடியோ வெளியீடு
|ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் காந்தாரி திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன் ஹன்சிகா நடிப்பில் வெளியான கார்டியன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அதை தொடர்ந்து ஹன்சிகா தற்பொழுது காந்தாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஆர் கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை முத்து கணேஷ் மேற்கொள்கிறார். படத்தின் மேகிங் வீடியோவை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.
ஹாரர் கதைக்களத்தில் அமைந்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.