ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்ச்சி ஒடிடியில் ஒளிபரப்பாகிறது
|ஹன்சிகா மோத்வானியின் திருமண நிகழ்ச்சி ஒடிடியில் ஒளிபரப்பாகிறது
மும்பை
ஹன்சிகா மோத்வானி தனது திருமண நிகழ்ச்சியை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்வதாக அறிவித்ததால் ரசிகர் கோபம் அடைந்து 'நீங்கள் இருவரும் உங்கள் நண்பரை ஏமாற்றிவிட்டீர்கள்' என கூறி உள்ளார்.
பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார் ஹன்சிகா மோத்வானி.
சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சொஹைலை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா மோத்வானி. தனது திருமண நிகழ்ச்சி விரைவில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ள ஹன்சிகா அந்த வீடியோவில், "ஹாய், இது ஹன்சிகா மோத்வானி, என் வாழ்க்கையில் மிகவும் விசேஷமான ஒன்று நடந்தது, நான் திருமணம் செய்துகொண்டேன்" (தனது திருமண மோதிரத்தைக் காட்டி) உங்களால் திருமண விடியோவைகாண முடியும். மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே முழு திருமணத்தையும் பார்க்க முடியும்.
"நிகழ்ச்சியின் பெயர் (காதல் திருமணம்) லவ் ஷாதி..."என்று அவர் கூறி உள்ளார்.
ஆரம்பத்தில் சோஹைலும், ஹன்சிகாவும் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் 2020 இல் நிறுவப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டாளிகளாக இருந்தனர். இருப்பினும், அவர்கள் விரைவில் காதலித்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஹன்சிகா முன்மொழியப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்தபோது, அவர், "ஐ லவ் யூ மை லைப் என்று கூறி இருந்தார்.ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் கதுரியா டிசம்பர் 4 அன்று திருமணம் செய்து கொண்டனர்.