எனக்கு எதிராக வதந்திகள் - நடிகை ஹன்சிகா வருத்தம்
|தனக்கு எதிராக தவறான வதந்திகள் அவதூறுகள் பரவியதாக வருத்தம் தெரிவித்து அவற்றுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஹன்சிகா.
தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். ஹன்சிகாவின் திருமண வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனக்கு எதிராக தவறான வதந்திகள் அவதூறுகள் பரவியதாக வருத்தம் தெரிவித்து அவற்றுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஹன்சிகா கூறும்போது, "நான் திருமணம் செய்துகொண்ட சோஹைல் எனது தோழியின் கணவர் என்றும், அவர்கள் குடும்பத்தை நான் உடைத்துவிட்டதாகவும் பலர் என்னை மோசமாக பேசினர்.
அது என் குற்றமல்ல. எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அவரை ஏற்கனவே தெரியும். நான் பொதுவாழ்க்கையில் இருப்பதால் என்னை வில்லியைப்போல் சித்தரிப்பது எளிதான காரியம். இது நான் பிரபலமாக இருப்பதற்கு கொடுக்கும் விலை.
நான் விரைவில் பருவ வயதை அடைய எனது தாயார் எனக்கு ஹார்மோன் ஊசி செலுத்தியதாகவும் பலர் குறை சொன்னார்கள். அது உண்மையல்ல" என்றார்