< Back
சினிமா செய்திகள்
சவாலான வேடங்களை விரும்பும் ஹன்சிகா
சினிமா செய்திகள்

சவாலான வேடங்களை விரும்பும் ஹன்சிகா

தினத்தந்தி
|
18 Jun 2023 11:00 AM IST

தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவுக்கு திருமணத்துக்கு பிறகும் வாய்ப்புகள் குவிகின்றன.

சினிமா வாழ்க்கை அனுபவங்கள் குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், "நான் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும்போது முழு படத்தையும் தனது தோளில் சுமக்க வேண்டிய பொறுப்பு இருக்கும். நான் அதற்கு தயாராக இருக்கிறேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான வேடங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா துறையில் இருபது வருடங்களாக நான் நீடித்து இருப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன். பெருமையாகவும் உள்ளது. பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன்.

சினிமா துறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கை பயணம் நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமன்றி ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்