சர்ச்சையில் ஹன்சிகா...!
|'பிறந்தநாளில் மது அவசியமா?', என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்
தமிழில் 'எங்கேயும் காதல்', 'மாப்பிள்ளை', 'வேலாயுதம்', 'சிங்கம்-2', 'பிரியாணி', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
'அமுல் பேபி' நடிகையான ஹன்சிகா, கடந்த ஆண்டு தொழில் அதிபர் சோகைல் கட்டாரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் அவர் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரது கைவசம் 5 தமிழ் படங்கள் உள்ளன. தெலுங்கிலும் 2 படங்கள் நடித்து வருகிறார்.
ஹன்சிகா தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.
கணவருடன், ஹன்சிகா மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், 'பிறந்தநாளில் மது அவசியமா?', என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
இதனால் ஹன்சிகா டென்ஷன் ஆகியுள்ளாராம். 'எதற்கெடுத்தாலும் விமர்சித்தால் என்ன செய்ய?' என்று நண்பர்களிடம் புலம்புகிறாராம். நண்பர்களும் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.