< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ரெபெல்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்...!
|4 Jan 2024 6:54 AM IST
இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
சென்னை,
அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
#Rebel soon …. Censor done pic.twitter.com/Z2gENlC1y3
— G.V.Prakash Kumar (@gvprakash) January 3, 2024