தங்கர்பச்சான் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசை
|ஒளிப்பதிவாளர் மற்றும் டைரக்டர் தங்கர்பச்சானுடன் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் முதல்முறையாக இணைந்து பணிபுரிகிறார்.
படத்துக்கு, 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்ட 'அழகி', 'சொல்ல மறந்த கதை', 'தென்றல்', 'பள்ளிக்கூடம்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' போன்ற தரமான படங்களைக் கொடுத்தவர், தங்கர்பச்சான். இவருடைய இயக்கத்தில், 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படம் உருவாகிறது. வீரசக்தி தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவரும் அழுத்தமான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏகாம்பரம், ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.
அவர் டுவிட்டரில், "தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்துக்காக பாட்டு எழுதும்போது, சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்துக்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை, கண்களாவது இருக்குமா?" என அழுத்தமான மனஉணர்வுகளை பதிவிட்டுள்ளார்.