< Back
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
14 March 2024 10:19 PM IST

இவானா மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சென்னை,

பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கள்வன்'. ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் இத்திரைப்படத்தை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் , இவானா மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா படத்தொகுப்பில் இப்படம் வெளியாகவுள்ளது.இந்நிலையில்'கள்வன்' படம் ஏப்ரல் 4-ம் தேதிவெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்