ஜி.வி.பிரகாஷ் படத்தின் புதிய அப்டேட்
|'டியர்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்
சென்னை,
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'டியர்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளனர்.இந்த படம் நாளை வெளியாகிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, 'ப்ளாக் ஷீப்' நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் படத்தின் பாடலான மஜா வெட்டிங் பாடல் யூ டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் , படத்தின் அடுத்த பாடலான ஸ்லீப்பிங் பியூட்டி பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் தற்போது வெளியாகிவுள்ளது.
Here's my rant, #SleepingBeauty ▶️ https://t.co/UKmA5MDJ8T#DeAr #DeArFromApril11 @tvaroon #AbhishekRamisetty #PruthvirajGK @mynameisraahul #RomeoPictures @saregamasouth @aishu_dil @Anand_Rchandran @jagadeesh_s_v @editor_rukesh @narentnb @venkatjashu @proyuvraaj
— G.V.Prakash Kumar (@gvprakash) April 9, 2024